ஆவியில் வேக வைத்த அப்பம்,
குழந்தை முதல் பெரியவர்களின் வரை வயிற்றுக்கு பிரமாதம்!
பல வகை அரையப்பங்கள், வெள்ளை நிறத்தில் தேங்காய் துவையல்,
பச்சை நிறத்தில்
புதினா மற்றும் மல்லி துவையல்,
சிகப்பு நிறத்தில்
கார மற்றும் தக்காளி துவையல்,
மஞ்சள் நிறத்தில் உள்ளி துவையலுடன்
சாம்பாரும் தொட்டுக்கொள்ள அரைப்பங்களுடன் வெந்த கும்மென்ற சத்தான அப்பமும் சேர,
காலை மாலை உணவு வேளை வெகு ஜோரு, ஜோரு!
மருத்துவமனை வாசமா? பண்டிகை விசேஷமா? மல்லிப்பூ இட்லியே வெகுமானம்! இளைய தலைமுறையையும் ஈர்க்குமே பலவகையான இட்லி!
ரவா இட்லி!
தாளித்த இட்லி!
நெய் இட்லி!
பொடி இட்லி!
நம் நாட்டின் பாரம்பரியமான அப்பம் கன்னட மொழியில் விளித்து காடு, மேடெல்லாம் விரவி, பரவி
உலக இட்லி தினம் கொண்டாடும் வரை பெருமை பெற்றதில் வியப்பேதும் இல்லையே!!
இட்லியை உலகில் பரப்பிய பெருமை நம்மவரையே சாருமே!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: ஆவியில் வெந்த அப்பம்
previous post