மனிதனின் உடலில்
தனியாக இல்லை தன்
பணி செய்யும் ஒருவராக
லப் டப் என்று துடிக்கும்
இதயம் என்ற வீட்டில்
உதயமாகும் குருதி
சரிவர செல்கிறதா என
கண நேரத்தில் செப்பிவிடும்
மருத்துவரின் மனம் விரும்பும்
உனை இதயத்துடிப்பு மானி
என்றும் சொல்லுவர்
உன் பேச்சில் உண்மை இருக்கும்
என்பதால் தைரியமாக
எண்பது வயது முதியவரும்
நடமாடி மகிழ்கின்றனர்
மருத்துவரின் கடமைக்கு
உறுதுணையாக இருக்கும்
இதயத் துடிப்பு மானியே நான்
செய்யும் பணிக்கு ஏற்ப
வேகமாகவும் குறைவாகவும்
இதயம் வேலை செய்வதை உணர்த்துபவன் நான்
சதம் அடிக்க என்னை தினம் உற்சாகப்படுத்தும்
இதயத் துடிப்பு மானியே நீ
மருத்துவருக்கு மட்டுமல்ல
எனக்கும் நல்ல நண்பன்
உஷா முத்துராமன்