என்னவனே!
தொலை தேசத்தில் நீ
வேலை நிமித்தமாய்……
உன் அருகாமை…..
ஏங்கித் தவிக்கும் நானும்
கர்ப்பத்தில் நம் சிசுவும்….
என் வலக்கரம் தழுவி
நிற்கும் இரு 💓 ❤️
இணைந்த பிரேஸ்லெட்
உன் அன்புப் பரிசாய்….
நித்தநித்தம் புத்துயிர்
தந்து சீராக்குமே….
எங்கள் சுவாசம்தனை…..
நாபா.மீரா