இத்துடன்
முடியும் என முடித்து விடாமல்
நம்மால்
முடியும் எனத் தொடங்கி
புத்தம் புதிய
வரவழைப்புகளை
வரவழைத்து
அழைப்பு விடுத்து
வேண்டியதைப் பெற
வேண்டி நிற்க
வருங்காலம்
வருந்தாத காலமாகி
வாழ்வை வளப்படுத்தி
வளமாக்கி
வாழ வழி சமைத்து
வைராக்கியமெனும்
தோணிகொண்டு
கடந்து செல
காலத் தேற்றம்
கணக்கைச் சரியான
சூத்திரம் கொண்டு
கணித்துச் சொல்லுமென்ற
நம்பிக்கையுடன்
நம்பி நடந்து
எல்லாவற்றிற்கும் முடிவிருப்பினும்
உவகை சூழ
சுற்றத்துடன்
பயணப்பட
வாழ்வு
அழகாய் மாறும்!!!
ஆதி தனபால்