இன்னும் எத்தனை மலை
ஏற வேண்டும்
எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமென
தெரியவில்லை
சிட்டுக்கள் மரம் ஏறினால் கூட
கூட்டுத் தேன் எளிதில் கிடைத்து விடுகிறது.
எளிதில் கிடைக்காத
உலகிலேயே
சுவை மிகுந்த
அந்த இதழ் தேனை சுவைப்பதில்
முனைந்து,அலைந்து
அல்பாயுசும் வந்து விடுமோ?!
-லி.நௌஷாத் கான்-