இப்பொழுது எல்லாம் எங்கள் வீட்டில் மருந்துகள், ஆடைகள், சவர்காரதுண்டுகள், இன்னும் சில பொருட்கள் அதிகமாகவே திருட்டுப்போகின்றன…
நான் ஆசையாக வாங்கி வைத்த என்னுடைய கவிதை புத்தகங்களும் பலவாறு கடித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது போல் மேசையில் கிடந்தன…
அதுமட்டுமா? அப்பாவின் ஆசையான சட்டையில் அவுஸ்திரேலியா கண்டம் போல ஒரு துண்டை காணவே இல்லை…
நாளை காலையில் உண்பதற்காக தம்பி ஆர்வத்துடன் வாங்கி வைத்த ஆப்பிள் பழத்தில் இரண்டு துண்டுகளை துளையிடும் திருடனே இன்று கையும் களவுமாக மாட்டிக்கொண்டாயா?
இப்பொழுது எல்லாம் உன்னை பிடித்து அழிக்க என் மனம் எண்ணம் கொள்ளவில்லை…
மாறாக உன்னிடம் இருந்து எப்படி வீட்டை பாதுகாப்பது என்ற முடியற்சியில் முழுமையாக இறங்கி விட்டேன்…
தினமும் உனக்கும் எனக்குமான யுத்தம் முடிவின்றி தொடரும் தொடர்கதையானதை என்ன சொல்ல?
ரஞ்சன் ரனுஜா