வான் மண் நீர் நெருப்பு
காற்று என
மாசற்ற ஐம்பூதங்களில்
பாசமுள்ள வானமே
நேசமுடன் உன்னை
வேஷமின்றி ரசிப்பேன் .
சூரிய கோள் மற்றும்
தேறிய நிலவும் உன்
வீதியில் நடமாடி
போதிமரத்தடி புத்தராய்
வேதியல் மாற்றம் இல்லா
சேதி சொல்வதை
பாதியின்றி முழுமையாக
நம்புகிறேன். இதில்
தெம்பும் வருவதால்
வம்பு வேண்டாம் என
சூரியனை வணங்கி
வீரிய பலம் பெறுகிறேன்
உஷா முத்துராமன்