பேய்
இருட்டின் முகம்,
காற்றின் சலசலப்பு,
இதயம் துடி துடிக்கிறது.
தூரத்தில் ஒரு நிழல்,
கண் இமைக்காமல் பார்க்கிறது.
காதில் ஒரு ஓசை,
கூச்சல்,
அழுகை,
கண் இமை எழும்புகிறது.
பயம் கலந்த ஆர்வம்,
தெளிவாக தெரியும்
பேயின் முகம்.
இருள் சூழ்ந்து,
மனம் கலங்கி,
ஓடி மறைந்து,
பேய் மறைந்தது,
இருள் மட்டும் மிஞ்சி.
அம்னா இல்மி