வனம் நாம் நலமாக
தினம் வாழ உதவும்
பணம் தேடா நண்பன்
வனத்தின் உள்ளே
சினமின்றி நடமாடும்
குணமான மிருகங்கள்
இந்த வனத்தினையும்
சொந்தமில்லா மிருகங்களையும் மனிதன் என்ற
கள்வனிடமிருந்து
சொல்லாமல் காக்க
வெல்லாமல் போடப்பட்ட
கல்லில்லா இரும்பு கேட்
இதையும் தாண்டுவேன் என
எதையும் பிடிவாதமாக
செய்தால் இந்த
இரும்பு கேட் அமைதியாக
புலம்புமே தவிர
வேறொன்றும் செய்யாது.
உஷா முத்துராமன்
