உங்களிடமெல்லாம்
சண்டையிட மனமில்லை
வாதங்கள் செய்யலாம்
விதண்டாவாதம் செய்பவனிடம்
உங்கள் தரப்பு நியாயங்களை
கத்தி சொல்வது கூட வீண்
வெற்றி பெற வேண்டுமென்றால்
அமைதியாய் இரு
முயற்சி செய்
தொடர்ந்து போராடு
ஆப்பிரகாம் லிங்கன்
சொன்னது போல
கடிக்க நினைக்கும் நாய்களுக்கு
வழி விடுவதே மேலானது.
பூமிக்குள் பல ஆயிரம் ஆண்டுகள்
நிலக்கரியாய் புதைந்து வெளிவரும்
வைரம் போல
நீயும் ஒருநாள் வருவாய்
உன் வருங்கால வெற்றியை
உன்னை வெறுக்கும்
எதிரிகளால் கூட மறுக்க முடியாது!
விருட்சமாய் வெளிவரும் வரை
காத்திரு
உனக்கான ஒருநாள்
நிச்சயம் வரும்!
-லி.நௌஷாத் கான்-
