விதவிதமான சொகுசு
கார்களில் மோட்டார் சைக்கிள்களில்
ஸ்கூட்டர்களில் வருகிறவர்கள் அவைகளை நிறுத்திவிட்டு
வேகமாக நடக்கிறார்கள்
மெல்ல நடக்கிறார்கள்
வேகமாக ஓடுகிறார்கள்
மெல்ல ஓடுகிறார்கள்
நடப்பதே வாழ்க்கையாக
அமைந்த காலம் உண்டு
இன்று உடல் நலனுக்காக
நடக்கிறார்கள் ஓடுகிறார்கள்
க.ரவீந்திரன்