இன்று உடலுக்கு மருந்து தேடுகிறோம்
உணவே மருந்து என்று சொன்ன காலம் போய்,
இப்போ மருந்தே உணவானது, இந்த புது
கணினி உலகில்
இதய வடிவில்,வட்ட, நீள வடிவில் கண் கவர்மாத்திரைகள், இந்த கண்ணாடி குடுவையில்
வாழ்க்கை என்ற மருந்துக் கூண்டில், நிரம்பி வழிகிறது.
நோய் என்று சொல்லக் கூடாத நிலை…
ஆனால் மருந்தென தேடி உண்கிறோம்.
பிங்க் மற்றும் வெண்மை நிற மாத்திரைகள்,
கசப்பு பிழிந்து எடுக்கப்பட்ட சாராம்சம்.
வயிற்றுக்கு உணவு தேடினோம்,
இன்று உடலுக்கு மருந்து தேடுகிறோம்.
வாழ உணவா, மருந்தா?
இரண்டுமே ஒன்றுதான்
இப்போ இருக்கும் நிலைமைக்கு…
இ.டி.ஹேமமாலினி .
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: உடலுக்கு மருந்து
previous post
