விடியலுக்கு ஆயத்தமாகும் கார்கொண்டல் மஞ்சள் வானம்…
மென்காற்றில் மிதக்கும் வெண்முகில்கள்…
பரந்து விரிந்து உயர்ந்த பர்வதங்களின் அரவணைப்பில் பச்சை பதுக்கை…
மலை ராணியின் பின்னலிட்ட வெண் குழல் வெண் அமுதமாய் ஆர்ப்பரித்து அருவியாய் பொழியும்…
அடர்ந்த அடவியின் வண்ண முகைகளின் வாசம்…
அதை பருகிட வரும் சில்வண்டுகளின் ரீங்காரம்…
அமுத கானம் இசைக்கும் கானகத்து சின்னஞ்சிறு பட்சிகள்…
இணை புள்ளினங்கள் காதல் கொண்டு கூடி இணையும் தருணம்…
உண்ணிகள் தங்கள் குட்டிகளுடன் சோம்பல் முறித்து கொஞ்சி விளையாடும் முன் காலை பொழுது…
குறிஞ்சி இளந்தென்றல் மெட்டு இசைத்து இதமாய் குளிர் பரப்பும் வைகறை வரவில்…
இரவின் இருளை பிரிந்து எழுந்து மேதினியெங்கும் தண்ணொளி வீசி வானவில்லின் வண்ணமாய் பரிணமித்து உதயமாகிறான் வெய்யோன்…
எழில் கொஞ்சும் இயற்கை பேரழகில்…!
✍️அனுஷாடேவிட்