உதிரத்தை உரமாக்கி
உருவாகி சொல்லாது
இல்லாமல் போன
சுதந்திர காற்றே
எங்கே நீ………
அன்னியனைத் துரத்தி
அஹிம்சையில் வென்ற
தியாகிகள் மகிழ்ந்த
சுதந்திர காற்றே
எங்கே நீ………
சாதி சங்கத்திலும்
மதவாத கட்சிகளிலும்
காணாது போனாயா……
வன்முறை வாளால்
கண்டதுண்டமாக வெட்டி
வீழ்த்தப் பட்டாயா…….
சீர்கெட்ட சுத்தமற்ற
சுயநல அரசியலால்
சீரழிந்து போனாயா……
சமூக சமநிலையோடு
ஏற்ற தாழ்வற்ற
வறுமை பிணியற்ற
ஊழல் லஞ்சமற்ற
இன்றைய நிலை மாறுமா?
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண முடியுமா?
சமதர்ம சமநிலை
சமாதானம் தேசிய
மலராய் மலர்ந்து🪷
பாரத மணிக்கொடி🇮🇳
பாரெங்கும் பட்டொளி
வீசி பறக்கும்
நாளை(ளே)
சுதந்திர காற்றே!!!!!!
சுகமாக வீசு…….
சுதந்திரமாக வீசு……
பத்மாவதி