உரச உரச
உடைகிறது உட்பொருள்
உடைய உடைய
உருகுகிறததன் நறுமணம்
உருக உருக
உறைகிறததன் உன்னதம்
உள்ளுக்குள் உறைந்திருக்கும்
உள்ளுரம் வெளிப்படுமாயின்
உடைபடுதலும் உசிதமே
உள்ளபடி உரைக்கிறது
உள்ளங்கை உயர
உரல் கல்லிற்குள்
உடைந்து உயிர்பெறும்
ஏலக்காய் மணம்!
புனிதா பார்த்திபன்