நகமே உன்னை
வெட்டாமல் சென்று
பள்ளியில் குட்டும் திட்டும்
வாங்கிய போது
தேங்கிய சோகத்தை
போக்க எளிதில் வெட்டும் நகவெட்டியே நீ இல்லையே….
வளரும் நகத்தை சீர்
திருத்தி பாங்குடன் வளர்க்க
உதவிய நகம் வெட்டும் நீ
பதவிசாக கிடைத்தவுடன்
பணியில் பாரமில்லை.
வளர்த்த நகத்தை உன்னால்
சீராக்கி அதற்கு வண்ண
பூச்சசுகளும் மருதாணியும்
பேச்சின்றி செய்து முடித்தேன்
அன்று நீ இல்லை அல்லல்
இன்று நீ கிடைத்ததால்
துள்ளலுடன் உன் உதவியால் பராமரிக்கிறேன் என்
நகம் என்ற அழகு தங்கத்தை
உஷா முத்துராமன்