தெரு விளக்கு ஒளி சன்னமான
ஒரு திகிலை எனக்குள் விதைக்க;
பறந்து கொண்டிருக்கும் துண்டு சீட்டுகள்;
கரந்து வரும் அச்சம்
மிகுதியாக;
மனம் மரத்துப் போய் நிற்க;
மறந்து போய் ; உன் அருகில்
நான் வந்து, மென்மையாய் உன்னைத்
தூக்க; அடங்கா சிரிப்பொன்று வந்தது;
நீ ஒரு பஞ்சு பொம்மை
எனக் கண்டு கொண்ட அக்கணம்.
சசிகலா விஸ்வநாதன்