உன் பேரை சொல்லும் போதே
உமிழ்நீரும் ஊற்றெடுக்கும்
உடன் பிறப்பு என்றாலும்
பங்கீடு பகையாகுதே
குளிரும் இல்லாது
வெயிலும் இல்லாது
இதமான சூழலிலே
உனக்கு ஜனனம்
உதடும் படாமல்
பல்லும் படாமல்
தாடைக்கும் நாவுக்கும்
இடையே கரையும்
இனிப்பும் இல்லாமல்
கசப்பும் இல்லாமல்
இடையே உனக்கொரு சுவை
ஆறு சுவையில்
ஆறாத சுவை உனக்கு
ஆறு முதல்
அறுபது வரை
ஒதுக்காத சுவை உனக்கு
சர் கணேஷ்