உன் மதி போன்ற வதனத்தைக் கண்டு அந்த மதியும்தான் மறைகிறதோ?
உன் கொடியிடை கண்டு அந்த நதியும்தான் நெளிகிறதோ?
உன் கரிய கூந்தலைக் கண்டு அந்தக்
கார்மேகம்தான் கவலையுற்றதோ?
புள்ளினம் மட்டும் உன் நடனத்திற்கு மகிழ்ந்து நர்த்தனம் ஆடுகிறதோ?
எனக்கும் சிறிது உன் நடனத்தைப் பயிற்றுவித்தால்,
நானும் உறுதியுடன் கற்று சிறப்பேனே என் கண்மணி.
சிவராமன் ரவி, பெங்களூரு.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)