உன் வரவை
எண்ணி மகிழ்வதா
நோவாதாவென்றே தெரியாமல்
நான்!!
அனைத்து உணர்வுகளையும்
உன் மூலம் கடத்தி விடுகிறேன்… உலகமே உள்ளங்கையில் தான் உள்ளது…
ஆனால் மகிழ்ச்சி தான் இல்லை…
உன்னுள் அடக்கி உன்னுள்ளே ஒடுக்கி கொள்கிறாய்…
ஐந்து நிமிடம் கூட பிரிய மனமில்லா நிலையை என்னவென்று வரையறுக்க முடியாத கையறு நிலையில் நான்…
பலநேரம் உன் அழைப்பு அழகாகவும் பல நேரம் என்ன விபரீதமோ என்று பதைபதைக்கவும் வைக்கிறாய்…
நீ நல்லவனா கெட்டவனா யாம் அறியும் பராபரனே உனக்கே வெளிச்சம்…
உனக்குள் தொடங்கி உனக்குள்ளே அடங்கி போகிறது என் பொன்னான மணித்துளிகள்… பின்னொரு நாளில் வாய்விட்டு சிரிக்குமோ நான் தவறவிட்ட மணித்தியாளங்கள்…
அலைபேசியாய் கைக்குள் வந்து தொல்லைபேசியாய் மாறிவிட்டாய்…
மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் அடுத்த நொடியே தீண்டுகிறேன் என்னை என்னிடமே திருப்பிக் கொடுத்து விடேன் நான் நானாக இருந்து விட்டு போகிறேன்… சுற்றம் சூழ வாழவே ஆசை உன்னால அடுத்த அறையில் இருப்பவர்களிடம் கூட மனம் திறக்க முடியாத ஆயுள் கைதியாக்கி பூட்டி வைத்திருக்கிறாய்
போதும் உன் வளர்ச்சி நிறுத்திக் கொள்…
படம் பார்த்து கவி: உன் வரவு
previous post
