1.உன் விழி ஈர்ப்பு விசையை குறைப்பதற்கு கண்ணாடி அணிகிறாய்.
- உன் விழிக் குளிர்ச்சியை கண்ணாடிக்கு தந்து கண்ணாடியை சூடேற்றுகிறாய் கூடவே என்னையும்…
- உன் விழி பார்த்து பேசிட தைரியமில்லா நான் கண்ணாடி அணிந்து காதல் பேசுகிறேன் உன்னுடன்…
- எத்தனையோ கண்ணீர் துளிகளை மறைத்த கண்ணாடி எப்போதும் அழுவதில்லை…
- ஆணின் வெட்கம் அழகானது என்றாலும் உன் முன் வெட்கப்பட வெட்கப் பட்டு அணிகிறேன் கண்ணாடி…
- எதிர்வரும் கண்ணீர் துளிகளை துடைத்திட கைக் குட்டையும் மறைத்திட கண்ணாடியும் அணிகலனானது…
7.தோழியொருத்தி தைரியம் கிடைத்தது என்றாள்.
நன்பனொருவன் கண்ணீரை மறைக்கிறது என்றான்.
வெட்கத்தை மறைப்பதாக காதலியும் வெட்கப் படுவதை ரசிப்பதற்காக காதலனும் சொன்னார்கள்… கண் நோய் குணமாக்க மட்டுமே அணிந்ததாக தாத்தா சொன்னார்…எப்படிச் சொன்னாலும் அங்கமாக இருக்கிறது கண் கண்ணாடி…
கங்காதரன்