அடுக்களையில் இருந்தாலும்
ஆலையில் இருந்தாலும்
தனி சிறப்பானவன் நீ
நெல்லிலிருந்து உமி பிரிந்து அரிசி கிடைத்தது உன்னால்
வில்லிலிருந்து அம்பு வந்தால் உயிர் பிரிந்திடும் தன்னால்
அடுக்களையில் அரைவேக்காடு முட்டைக்கு மிளகு இடித்தாய்
வைத்திய சாலையில் நோய்க்கு மருந்தாக ஆயிரம் வேர் இடித்தாய்
அசையாமல் நிற்கும் உரல்
அசையும் உலக்கையால் பொருள்
அடுத்த நிலை அடையுமே
— அருள்மொழி மணவாளன்