கருவாய் தரித்து என்னுள்ளே முட்டியும்
மோதியும் நீ விளையாடிய பொழுதுகள்
ஆஹா எத்துணை இன்பம்…. கருவறை
திறந்து பூமியில் விழுந்தும் தொப்புள்
கொடி பந்தமாய்… நின்றதா உன்
லீலைகள்? முகத்தில் அடித்தும்,முடியை
இழுத்தும் நீ செய்த சின்னச் சின்ன
இம்சைகள்…. ரசித்து மகிழ்ந்த அந்தப்
பொழுதுகளில் சத்தியமாய்த் தெரியாது
பின்னொரு நாளில் வளர்ந்த கிடாவாய்
மார்பில் பாய்வாய் நீ என……
நாபா.மீரா
படம் பார்த்து கவி: உறவின் பிடியில்
previous post
