கன்னியவள் கண்ணீரோடு ஜன்னலின் பின் வீற்றிருக்க
காளையவன் காதலோடு காத்திருக்கின்றான் தவிப்பாய் வெளியே
காதலியின் மௌனமே இரும்புத்திரையாக இருக்கிறது அவன் முன்னே
இதயக்கதவை கொஞ்சம் திற பெண்ணே
இரும்புக் கதவை உடைத்து உள்ளே வருவேன் கண்ணே
ஆம் என்று ஓர் வார்த்தை சொல்
வேண்டாம்..
பேசினால் உன் வாய் வலிக்கும்
சம்மதமென தலையை மட்டும் அசைத்திடு
வேண்டாம்..
தலையசைத்தால் கழுத்து நோகும்
உன் கடைக்கண் பார்வை மட்டும் போதுமடி
முன் இருக்கும் இரும்புக் கதவை சுக்கு நூராக உடைத்து
உடும்பென உன் உள்ளம் பற்றிடுவேன்
கண்ணே…
— அருள்மொழி மணவாளன்
