கைக்குழந்தையாகிப் போன
நீர்க்குடுவை
சுமையெனக் கருத
இடமில்லை
சுகமானதாகிப் போனது..
வசீகர நிறத்தால்
எத்தனை நிறங்களில்
வடிக்கப் பட்டாலும்
உள்ளிருக்கும் நீரின்
உண்மைத் தன்மை
மறைக்கப்படுமோ!
நீரின்றி அமையாது
உலகெனின்
நீ இன்றி
பயணப்படாது
பயணம்..
தாகத்தின்
தாக்கத்தில்
தங்கமாய் நின்று
அங்கமாய் மாறும்
நினது பெருமையை
எச்சொற்களால்
நிரப்புவது!!
ஆதி தனபால்
