நித்தமும் நீ எனை தொடர்வதேனோ எனதழகா!
நான் செல்லும் ரயிலில் எனருகில் உன் வாசம்….
கண்டுகொண்டேன்..
கண்டுகொண்டேன்..
நான் அருந்தும் தண்ணீர் போத்தலின் நிறத்தை என்னைப் போலவே வரிசையாக மாற்றும் உன் புத்திக் கூர்மையை எண்ணி வியந்தேனடா!
உனைச் சீண்டும் எண்ணம் கொண்டேன் அன்பே!
எனது ஆறாவது நாள் ரயில் பயணத்தில் நீ மஞ்சள் போத்தல் வைத்து இருக்க, உன் சாமர்த்தியம் அறிந்த நானோ இளம் சிவப்பு போத்தலை வைத்து இருந்தேன்….
அதிர்ந்தான் அவன்…
என் விழிகளோடு அவன் விழிகளைக் கலந்து கண்டு கொண்டாயா பெண்ணே? என்று அவனின் விழிகளே என்னிடம் காதல் மொழி பேசியது….
நன்றி ❤️
- ஜீவேந்திரன் சாஹித்யா