என்னவனின் கைவிரல் என் நுதல் தீண்டி குங்குமம் இட்டிடவே வாழ்நாள் முழுவதுமாய் நான் காத்திருக்க…
காலங்களோ கடந்தோட
நான் கொண்ட பேராவல் இன்றும் இல்லை ஈடேற…
வருங்காலமாவது வாழ்வில் வசந்தம் தரும் என அவன் வருகையை நான் எதிர்பார்த்திருக்க…
நான் கண்ட கனவும் நனவாகுமோ
கானல் நீராகுமோ
விதியை நானறியேன்…
விதியை மதியால் வெல்லவே என் மனம் துடிக்க விதியோ என் வாழ்வில் செய்யும் சதியை
எந்த வழக்குரை மன்றத்தில் தான் முறையிட…
ரஞ்சன் ரனுஜா