என் காதல் காவலனே!!❣️
சிவந்த மதுவின் போதையையும்
ஆயிரம் மலர்களின்
தேன் சுவையையும்
கூட மிஞ்சி விடுகிறது…
பல நேரங்களில்
நீ தரும்…
என் உயிர் தீண்டும்
இதழ் முத்தம்❤️❣️
ஆயுள் வரை
நானும் உன் இதழ்
முத்தத்தின் போதைக்கு
அடிமை தான்….
நொடிப் பொழுதும்
விடுவிக்க எண்ணாதே
முடிந்தால்
ஆயுள் வரை
உன்
காதலால் கைது
செய்து விடு……
🩷 லதா கலை 🩷