இனியவனே
பெண்களை ஈர்க்கும்
உன் கண்களுக்கு
கடிவாளமாய்….
கதிரவனின் ஒளியில்
இருந்து
உன் கருவிழியை
காக்கும்
கருவியாய்….
மாசில்லா உன் விழியில்
தூசி பட்டு கலங்கி
விட்டாலும்
தாங்கி விட முடியாத
மனைவியாய்…
எனக்கே எனக்கான
உன் விழிகளை
காக்கவே……
உன் அழகுக்கும்
உன்னை நான்
மட்டுமே ரசிக்க
வேண்டும்
எனும் உரிமைக்கும்
சேர்த்து
பரிசாய் கொடுத்தேன்….
கருநிற கண்ணாடியை……
🩷 லதா கலை 🩷