உருளையினை உகந்து சாப்பிட்டேன்
தக்காளியினை தவமாய் சாப்பிட்டேன்.
அவரையினை அகமகிழ்ந்து உண்டேன்
பூசணியினை புன்னகையுடன் உண்டேன்
வெங்காயத்தினை வெறுமனே சுவைத்தேன்
சுண்டைக்காய் சுகமாக
சுவைத்தேன் வெண்டைக்காயினை
சண்டையின்றி ரசித்தேன்
கத்திரியினை கலகலவென ரசித்தேன்
ஆனால்…………..
பச்சை நிற பாவற்காய் உன் மீது
இச்சை வர உன் கசப்பும்
அதனால் குறையும் சர்க்கரை
அளவும் என்பதால்
கண்ணே………….
நீயே என்னை கவர்ந்தவள்
பாவை பாவக்காய் உன் நட்பு
எனக்கு தேவையே!!!
உஷா முத்துராமன்