என்னை பொருத்தவரை-உன்
பிதாவும்
பிரம்மா தான்.
உயிர் அணுவால் தேவதையை
உருவாக்கிய பிரம்மா!
நிலக்கரியாய் இருக்கும் வைரம் உருவாக
பத்து வருடம் ஆகுமாம்-உன்
அன்னை மட்டும் எப்படி
உன்னை
பத்தே மாதத்தில் உருவாக்கினாள்?
தங்கம்,மரகதம்,பட்டு,பவளம்,வைடூரியம்
செல்லம்,கண்ணு,பொண்ணு
அமுலு,புஜ்ஜு ,பேபி போன்ற வார்த்தைகள் எல்லாம்
உனக்காக மட்டும் படைக்க பட்டவை.
எனக்கொரு ஆசை
நீ நினைப்பது போல
உன் கரம் பிடித்து நடக்க ஆசை இல்லை.
உன்னோடு கை கோர்க்க ஆசை இல்லை..
ஒரே ஒரு முறை
உன் பார்வையாவது
என் மீது வீசி விட்டு போ.
பிறவி பயனை அடைந்து விட்டு
மரணிக்கிறேன்!
-நௌஷாத் கான்.லி-
