ஒவ்வொரு நாளும் என் பிறை நுதலும் வேண்டி நிற்கும்,
உன் விரல் தீண்டி குங்குமம் இட்டு
என்னவன் நீ என்றும் உன்னவள் நான் என்றும் உயில் எழுதிய நாட்களை..
ஏனோ இப்போதெல்லாம் கண்ணாடி முன்னின்று பார்க்கும் போது தான் புரிகிறது
கனவுகளில் வாழ்ந்து விட்டேன் என்று…
-குரங்கி
