எருது பூட்டி
ஏர்உழுதே
கருதறுத்து
கழனி கண்டோம்
எருதுமில்லை ஏருமில்லை
கருதரு(த்த)க்க கழனியில்லை
கழனியெல்லாம் கட்டிடமாய்
விளைநிலங்கள் விலைநிலமாய்
காளைக்கிங்கே வேலையில்லை
காத்திடவும் யாருமில்லை
சிந்துவெளி காலம்முதல்
சொந்தமென வந்தனவே
சிந்தையதன் சீரழிவால்
சிறப்பினையே சிதறவிட்டோம்
எந்தையரும் முந்தையரும்
எருதுகளின் உறுதுணையால்
நிந்தையின்றி உழவுசெய்த
கருத்தினையும் மறந்துவிட்டோம்
பிந்தைவரும் சந்ததியும்
சிந்தைதனில் கருதுவரோ
சொந்தமின்றி போகுமிந்த
எருதினையும் கருதினையும்
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
