எலி வளையானாலும் தனி வளை வேணும் என
மனிதர்களுக்கு கற்று கொடுத்தவன் நீ…
முழு முதல் கடவுளின் செல்ல
வாகனம் நீ…
சுறு சுறுப்புக்கும் குறைவில்லாதவன் நீ…
சிறுவர் முதல் பெரியவர் வரை
மன நிம்மதிக்காக ரசித்து
பார்க்கும் டாம் அண்ட் ஜெர்ரியின்
கதாநாயகன் நீ…
மொத்தில் வீட்டில் எல்லா பொருட்களையும் திருடி
உண்ணும் கள்வன் நீ…!
( மிதிலா மகாதேவ்)