குழைந்த மண்
குயவன் திறத்தால்
பானையும் ஆகும்
யானையும் ஆகும்…
மண்பானைத் தண்ணீர்
எந்நாளும் நலம்..
கள்பானைத்
“தண்ணீர்”
என்றும் தீதே…
பொங்கல் பொங்கி
பங்கிட்டு உண்டபின்
மண்பானையை ஒதுக்கி.. ஓடுகிறோம் ஓவன் பின்னால்..
குக்கர் அரிசி சாதம் மக்கர் நம் உடலுக்கு..
பானையைப் பழகுவோம்… உடல் நலம் காப்போம்…
S. முத்துக்குமார்