ஏஞ்சலொருத்தி
மங்களகரமான
மஞ்சள் நிற ஆடையுடுத்தி
என் வீட்டு வாசலுக்கு வந்தாள்.
என்ன வேண்டுமென்றேன்
சிரித்து கொண்டே
நீ தான் வேண்டுமென்றாள்
அப்போது
பல்லியின் அசிரிரீ கேட்டு
கண்விழித்தேன்
கண்டது கனவெனயுணர்ந்தேன்
மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு
கண்ணயர்ந்தேன்
ஏனோ
மீண்டும் அந்த கனவு மட்டும்
வரவே இல்லை
அவளை போல!
-லி.நௌஷாத் கான்-