ஏனோ நான் அழுகின்றேன்
காரணம் நீ என்றே அறிகின்றேன்
காற்றோடு நீ கரைந்தாயா?
நதியோடு நீ மறைந்தாயா?
நீ இல்லை என்றே அறிவும்
நீ வேண்டும் என்றே மனமும்
நித்தம் நடக்கும் போராட்டம்
ஏனோ நான் அழுகிறேன்.
கருவோடு தான் உருவாக்ககினாய்
உதிரத்தையே நீ உணவாக்கினாய்
கடல் தாண்டும் பறவை போலே
என்னை வழி நடத்தி சென்றாயே
பிணியாலே நீ உயிர் நீக்கினாய்
நடு வானில் எனை நீங்கினாய்
ஏனோ நான் அழுகிறேன்
நீ தான் என் ஜீவாமிர்தம்
உன் பேரே என் திருமந்திரம்
கள்ளியில் முள்ளும் நீயே
துளசியில் வாசமும் நீயே
மறுபிறவி வேண்டாம் உனக்கு
மறைபொருளாக இருப்பதே சிறப்பு
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)