எல்லா வகை சட்னிக்கும் ஏற்ற
ஏழை பங்காளன்
மல்லாக் கொட்டை சட்டினிக்கு
மகிழ்வோடு உண்ணலாம்
மிளகாய் சட்னிக்கு
வேகத்தோடு உண்ணலாம்
புதினா சட்னிக்கு
புதுமையாய் உண்ணலாம்
மல்லி சட்டினிக்கு
மயக்கத்தோடு உண்ணலாம்
வெங்காய சட்டினிக்கு
விறு,விறுன்னு உண்ணலாம்
பூண்டு சட்டினிக்கு
ஏகந்தமாய் உண்ணலாம்
இட்லிக்கு சட்டின்னு சொல்லிவிடு
இல்லையென்றால்
பட்டினியாய் கிடந்து விடு!
-லி.நௌஷாத் கான்-