ஒரு கடற்காகத்தின் கவிதை
அழகான மாலை நேரம்
காதலை சொல்ல
சரியான தருணம்
மழை ஈரம் குளித்த வீட்டு சுவரின் வியர்ப்பு
நீ குளித்து முடித்து
தேவதையாய் வருவதை
நீ வரும் முன்பே
உன் மைசூர் சாண்டல் வாசனை
காற்றில் தூதாய் வருகிறது
வண்ணத்து பூச்சிகளின்
வர்ணங்களை பூசிக் கொள்ள விரும்புகிறேன்
காதல் வந்ததால் என்னவோ ??
வெடித்து சிதறிய
இலவம் பஞ்சு வானில் பறக்கும்-காதலை
வெளிப்படுத்த விரும்பும்
கடற்காகம் நான் எங்கு பறப்பேன் ???
என் காதலை உன்னிடம்
எப்படி சொல்ல ??
தினம் தினம் சிந்திக்கிறேன் …
உன்னை தவிர -இப்
பிரபஞ்சம் முழுதும் சொல்லிவிட்டேனடி
சுனாமியில் கடத்தி செல்லப்பட்ட
என் காதலை ??
ஒரு தூரிகை கொடு
என் காதலை
காடாய் ,கடலாய் ,பறவையாய் ,விலங்காய்
வரைந்து காட்டுகிறேன் !!
காதல் வண்ணத்துப்பூச்சி தான் -அது சொல்லாத
பொல்லாத காதல் யானையை
எப்படி தூக்கி சுமந்து பறக்கிறது ??
அழகிருந்து என்ன ?
அறிவிருந்து என்ன ?
படிப்பிருந்து என்ன ?
பதவியிருந்து என்ன ?
மனதில் ஊறும் காதலை
உன்னிடம் எப்படி சொல்ல ??
எந்த தைரியத்தில்
என் கடந்த காலத்தை உன்னிடம் சொன்னேன்
தெரியவில்லை??
எல்லாம் தெரிந்தும் ,என் சொல்லாத காதலை அறிந்தும்
ஏன் மௌனம் காக்கிறாய் ??
அன்றொரு நாள்
உன் எச்சில் பட்ட புனிதம் ஐஸ்க்ரீம் உண்டு
என் காதலை உனக்கு தெரியப்படுத்தினேன்
ஊர் செல்லும் கடைசி நாள்
பின்னால் அணைத்து சொன்னாயே
இதுவரை ஒளித்து வைத்திருந்த -அந்த
கவிதைத்துவமான காதலை !!!
I LOVE YOU -டி
I LOVE YOU -டா என்ற வார்த்தைகள் எதற்கு ??
டெல்மா தீவில் கடற்காகமாய் காதலோடு பறப்போம் வா !!
நௌஷாத் கான் .லி
