நீயும் நானும் இரு கரங்கள்,
பிரிவின் சுவரால் பிரிக்கப்பட்டிருந்தாலும்.
நம் விரல்களின் இடைவெளியில் தெரிகிறது,
ஒற்றுமையின் ஒளி நிறைந்த ஒரு புதிய உலகம்.
தனிமையில் இருந்தபோது,
நாம் கண்டது வெறும் இருளைத்தான்.
இப்போது கரம் கோர்த்ததால்,
நம் வாழ்வில் ஒளி பிறந்தது.
உலகம் மிகப்பெரியது,
அதை நாம் புரிந்துகொள்ள ஒரே வழி,
நாம் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது.
அப்போதுதான் நம் உலகம் விரிந்து தெரியும்.
அதேபோல்,
கைகள் கோர்த்துக்கொண்டால் இருள் இல்லை,
கனவுகள் மட்டுமே மீதம்.
நட்பின் வலிமையால்,
இந்த உலகம் அழகானது.
இ டி.ஹேமமாலினி.
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: ஒற்றுமையின் ஒளி!
previous post
