ஒளி நிறைந்த வாழ்க்கை நம் வசமாகும்
கரம் கோர்த்த கவிதைகள்
நீயும் நானும் ஒரே உலகத்தின் இரு கரங்கள்,
பிரிந்திருந்தும் இணைந்திருக்கும் நிழல்கள்.
நம் கைவிரல்களின் இடுக்குகளில்,
ஒரு அஸ்தமன சூரியன் அழகாய் எட்டிப் பார்க்கிறது.
நீயும் நானும் சேர்ந்திருந்தால் போதும்,
உலகத்தின் எல்லா அழகும் நமக்குச் சொந்தம்.
நம் இருவரின் பிடிக்குள் ஒளிந்திருக்கிறது,
ஒரு பிரபஞ்சத்தின் அன்பு.
பிரிந்துபோகும் உலகில்,
பிரியாத காதலின் பிடிப்புதான் இது.
கரம் கோர்த்துக்கொண்டால் இருள் இல்லை,
கனவுகள் மட்டுமே மீதம்.
வாழ்க்கை என்பது நம் கைகளுக்குள் இருக்கும்,
ஒரு காதல் அஸ்தமனம்.
அதை இருவரும் சேர்ந்து ரசித்தால்,
ஒளி நிறைந்த வாழ்க்கை நம் வசமாகும்.
இ.டி.ஹேமமாலினி.
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: ஒளி நிறைந்த வாழ்க்கை
previous post
