படம் பார்த்து கவி: ஔஷத வாழ்வு

by admin 1
10 views

நோய்களின் பெயர்கள் கூட
புதுமையாய் ஆனது…
ஔஷத்தின் தோற்றம்
அழகாய் மாறியது…
உணவே மருந்து
என்ற தத்துவம் மறைந்து,
மருந்தே உணவு
என்ற நிலை ஆகியது…
வண்ண வண்ண மிட்டாய்கள் போல,
மருந்துகளின் நிறங்கள்
கண்களைப் பறிக்கின்றது…
இதயத்தின் அறைகளைக் காக்க,
ஔஷதத்தின் அறைகள்
இன்று அவசியமாகிறது.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!