பச்சை வண்ணம் கண்டு
ஆசையாக உண்ண
தொண்டை வரை கசப்பு
கூசி உள்ளே செல்ல
பாசக்கார பெண்ணே என்று
பார்த்து அருகில் செல்ல
மோசக்காரன் என்று
விலகி பேவதேனோ
தேனொழுக பேசி
கரம் பிடிக்க நினைக்க
பாகற்காயின் கசப்பாய்
பகட்டாய் விலகி சென்றாய்
பாவி எந்தன் உள்ளம்
பாகாய் கொதிக்குதடி பெண்ணே
பாவை உந்தன் பார்வை
பனி போல் நெஞ்சை தாக்கும்
தேவை எனக்கு உந்தன்
காதல் கோண்ட பார்வையே
காத்திருக்கேன் கண்ணே
கசப்பான கவலையுடன்
காலம் தாழ்த்தாமல் வந்து
கரையாத காதல் தா
— அருள்மொழி மணவாளன்
