கட்டிளம் காளையாய்
வீரத்தில் பல கலைகள்
பயின்று,
கன்னியர்களிடம் கண்ணியம் காத்து வளர்ந்த அன்றைய காளையர்கள்
இன்று வரை அதே கண்ணியத்துடன் கம்பீரமாய் வலம் வர….
நவ நாகரீகத்தில் வளரும் இன்றைய இளைய தலைமுறை காளையர்கள்
அலைபேசி மோகத்தில்
வீரக் கலைகளை
அலைவரிசைகளில்
மட்டுமே பார்த்து,
கண்ணியத்தை கணினியில் மட்டுமே காட்டி
கட்டுத்தறி எருமையாக
வலம் வருவது,
வளர்ந்து வரும் நவீனங்கள்
நாகரீக வளர்ச்சியை
தலைகீழாக
மாற்றி
மனிதனை இயந்திரமாக்குகிறது…..
🩷 லதா கலை 🩷