படம் பார்த்து கவி: கண்களில் விண்மீன்

by admin 1
46 views

வெட்கப் பட்டு பாதி முகம் மூடி நீ சிரித்தாய்… விண்மீன் கண்ட சிலிரிப்பில் நான் உறைந்தேன்…

உன் வியர்வைத் துளியில் பட்டு ஒளிர்கிறது விண்மீன் வெளிச்சம்…

கண்களை சற்று மூடிக் கொள்… நிலவென நினைத்து விண்மீன்கள் வரப் போகின்றன…

இது நான் இது நீ இது நாம் இதோ இது நம் குழந்தை என விண்மீன் கூட்டங்களுக்கு பெயர் வைத்தாய்.. என்ன யோசனை எனக் கண்களால் வினவினாய்நிலவில் விண்மீனை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றேன் நான்…

பிரிவுக்கு பிறகான ஒரு சந்திப்பில் நம் விண்மீன் பேச்சைக் கூறி ஞாபகமிருக்கிறதா என்றேன்… இப்போதெல்லாம் வானமே பார்ப்பதில்லை இதில் வின்மீனெங்க என கண்களில் விண்மீன் சிதறினாய்…

விண்மீன்கள் இருக்கும் வரை நம் காதல் அழியாதென்றாய்… அதனாலேயே எல்லோரிடமும் நம் காதலை சொல்லிக் கொண்டிருக்கிறேன் இன்னமும்…

வின்மீனோன்று நகர்வதைக் கண்டால் தங்கத்தை பார்க்க வேண்டுமாம் நான் விண்மீனையே பார்த்துக் கொள்கிறேன்…

உன் ஞாபகமே வேண்டாமென எல்லாவற்றையும் மறந்தாலும் நிலவும் நட்சத்திரமும் உன்னை நினைத்தே இருக்க வைக்கின்றன.

ஆற்றில் மீன் பிடிக்க பயந்தவன் காதலால் விண்மீன் பிடித்தேன்…

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!