மேகங்கள் உறைந்திட
பசுமை பந்தலிட
தூவானம் தூறலிட
மெல்லிசை மிதந்து வர
மழை நீரில் நனைந்து வர
வீட்டுக்குள் புன்னகை பூக்க
குடும்பம் கூடி இருக்க
அன்பு அங்கே பெருகிட
காண்போர் மனம் மகிழ்ந்திட!
சாலையோரம் நீரோடும்
வீடு முழுதும் அழகோடும்
மனம் முழுதும் அமைதியோடும்
வாழ்க்கை முழுதும் ஆனந்தத்தோடும்!
மழைச்சாரல் தெளித்திட
வண்ணப் பூக்கள் சிரித்திட
பறவைகள் வானில் மிதந்திட
வீட்டின் கதவுகள் திறந்திட
பேசும் கண்களோடு
அன்பு வார்த்தைகள் பரிமாறிட
அழகிய வாழ்க்கை இது!
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி இது!
previous post
