இதழ்மொட்டுக்குள் இளமெட்டுக்கள்
இசைக்கவோ புசிக்கவோ
இமைக்காமல் ரசிக்கவோ!!
இறை விரற் தூரிகை
இயற்கையின் இறக்கையில்
இயற்றிய ஓவியமோ!!
அலையலையாய் அமைந்திட்ட
அணிமுத்தழகில் அதிசயத்து
ஆண்டவனும் அணிவித்தானோ
அடுக்கடுக்காய் ஆடையினை
கண்ணூறு காணாதிருக்க!
புனிதா பார்த்திபன்
