கண்முன்னே வாழ்ந்த
காலம் யாவும்…
கனவாகி போனதே…
ஏனம்மா….
மண்விட்டு மறைந்தாலும் ..
விண்ணோக்கி சென்றாலும்…
கண்விட்டு மறையுமோ நம் நாட்களம்மா….
உன் பிரிவென்னும் பேரிடி துயர்
என் இதயம் விட்டு நீங்குமோ…. அம்மா …
உயிர் தந்த ஓவியமே
உன்னை சித்திரமாய் வரைந்து …
அதில் உன் மடி சாய்ந்து தூங்கும்
குழந்தை போல் ஆனேன் நானம்மா ….
உன் கருவில் இருந்த
என் உடம்பு ..
இன்று தெருவில்
கிடக்குதே பாரம்மா….
இந்த காற்றில் கலந்து
என் கண்ணீர் துடைக்க முடியாமல்…
உன் ஆன்மா என்னை சுற்றி
தவிக்கும் பாடறிவேன்
நானம்மா ….
உலகை காக்கும்
இறைவனால் கூட
உன் உயிர் காக்க துப்பில்லாமல் போனது
ஏனம்மா…?
என்னை படைத்தது
நீயென்பேன்…
இறைவன் எல்லாம் இங்கு பொய்யம்மா…
உன் சித்திரம்
என் கோவில் என்பேன்…
அதில் வாழும் கடவுள்
நீயம்மா….
மீண்டும்
உன் கருவறைக்குள்
வாழும் குழந்தை
நானம்மா…..
— இரா. மகேந்திரன்–
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)