பருத்தி சணல் இவைகளை
பின்னிப்பிணைத்து இறுக்கியே
இழுத்தெடுக்கவும் மேலேற்றவும்
இயன்றதொரு காலம்
சுரங்கமதன் ஆழத்திலும்
சுமையதிகம் ஆனவற்றுக்கும்
கம்பி வடம் கைகொடுக்கவே
நம்பியதை கையெடுத்தனர்
ஆழ்கடல் தொடர்புக்கும்
ஆகாய மின் இணைப்புக்கும்
இன்றிதன் (கம்பி வடம்) பயனே இலகுவாகிறது
இலகுவாக்கியே,
பயனதிகம் ஆனதினால்
பலவண்ணமும் வடிவமும் ஆகியதே..
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
