கருவென உருவாக
உருவான உதிரமெல்லாம்
உடைபட்டு வெளியேறும் போது
திரை போட்டு அணைபோட
வந்த அற்புதமே!
திரவத்தை திடமாக்கி
மூன்று நாள் பயணத்தை
எளிமை ஆக்கினாய்
பந்தி முடிந்ததும்
எடுத்தொறியும் எச்சில் இலை
என்றே நினைத்தேன்
நீயோ இன்று
விச விருட்சமாக வளர்ந்து
பஞ்ச பூதத்தில்
நஞ்சை காலக்கின்றாய்
அதி வெப்பத்தில்
மூடப்பட்ட உலையில்
உன்னை தீக்கிரையாக்க
உலகம் உய்யும்
சர் கணேஷ்